ETV Bharat / state

கொடியேற்றத்துடன் துவங்கியது தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 442-வது திருவிழா! - Panimaya Matha Temple Festival - PANIMAYA MATHA TEMPLE FESTIVAL

Panimaya Matha Temple Festival: தூத்துக்குடி மனிமய மாதா பேராலயத்தின் 442வது திருவிழா கொடியேற்றத்துடன் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலாய  திருவிழா
தூத்துக்குடி பனிமய மாதா பேராலாய திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 1:45 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து பெற்றது. இப்பேரலாயத்தில் அமைந்துள்ள மாதா சொரூபம், கடந்த 469 ஆண்டுகளுக்கு முன்பு புனிதர் பிரான்சிஸ் சவேரியாரால் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு இந்த பேராலயத்தில் வைக்கப்பட்டது.

பனிமய மாதா பேராலாய திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 442-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதைத்தொடர்ந்து பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி கலந்து கொண்டனர்.

ஜாதி, மதம் வேறுபாடு இன்றி பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டாடும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி ஆகஸ்ட் 5ஆம் தேதி வெகுசிறப்பாக நடைபெற உள்ளது‌. இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடு என 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் 900 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வானதி சீனிவாசனுக்கு எதிராக அவதூறு கருத்து.. சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவருக்கு நூதன தண்டனை! - Vanathi srinivasan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.