ETV Bharat / state

தேனி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்கள்.. போராடி மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்! - Theni Flood - THENI FLOOD

Theni Flood: தேனி அருகே காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய 4 மலை கிராம மக்களை பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மலை கிராம மக்களுடன்  தீயணைப்பு துறையினர்
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மலை கிராம மக்களுடன் தீயணைப்பு துறையினர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 2:12 PM IST

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் பெரியகுளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு வந்து விட்டு சின்னூர் மலை கிராமத்திற்கு 8 பேர் சென்றுள்ளனர்.

அப்போது கல்லாற்றைக் கடக்க முற்பட்ட போது திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் மறுகரையைக் கடந்து சென்ற நிலையில் மீதமுள்ள நான்கு நபர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறை மீதுஏறி நின்று கொண்டு செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதனையடுத்து மறுகரைக்கு சென்ற மலை கிராம மக்கள், பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலில் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த பிச்சை, நாகராஜ், கணேசன், சுரேஷ் ஆகிய நான்கு நபர்களை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 4 நபர்களும் பெரியகுளத்தில் உள்ள அவரது உறவினர்கள் இல்லத்தில் தங்கச் சென்றனர்.

இது குறித்து சின்னூர் மலைகிராம மக்கள் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லாற்று பகுதியில் பாலம் கட்டி தர பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக் காலங்களில் உயிரைப் பணையம் வைத்து இந்த பகுதியை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை கமிஷனருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.