ETV Bharat / state

நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடிய கும்பல்.. சிக்கியது எப்படி?

Nagercoil Murder: நாகர்கோவில் அருகே 10 நாட்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்தாக கூறப்படும் ஆல்வின் அருள் ஜோஸ் வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 9:11 PM IST

Nagercoil murder
Nagercoil murder

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள மேலபெருவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வின் அருள் ஜோஸ் (வயது 41). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்.02 ஆம் தேதி, கார் விற்பனை தொடர்பாக அருள் ஜோசை ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைத்து உள்ளார். இதனையடுத்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்ட சென்ற ஆல்வின் அருள், காவல் கிணறு பகுதியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டுவிட்டதாக, ஜோஸ் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அடுத்த சுண்டான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து உள்ளனர். இது குறித்து நெல்லை மாவட்டம் பணகுடி போலீசார் விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சுமார் 10 நாட்களுக்குச் சிகிச்சை மேற்கொண்ட ஆல்வின் அருள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம், ஆல்வின் வழக்கு தொடர்பாக உறிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர், இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதை அடுத்து ஆல்வின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆல்வின் அருள் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கவில்லை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஆல்வின் அருளுக்கு ஏற்கனவே ராஜேஷ் மற்றும் இருதய ராஜன் என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் சேர்ந்து ஆல்வின் அருள் ஜோசை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக கார் விற்பனைக்கு, அழைப்பது போல ஆல்வின் அருள் ஜோசை செல்போனில் அழைத்து. காவல்கிணறு பகுதியில் வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு, விபத்தில் சிக்கியது போல் அவரது உறவினர்களை நம்ப வைத்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ், இருதய ராஜன், உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்- 60 பேர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.