சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் - மஞ்சு. கோயம்புத்தூரில் உள்ள டீக்கடையில் சந்திரசேகர் வேலை பார்க்கும் போது அங்கு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் மஞ்சுவுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு சிவகங்கைக்கு வந்து வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். 4 மாதத்திற்கு முன்னர் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிவகங்கை வாடகை வீட்டை காலி செய்துவிட்டு சிவகங்கை அருகில் உள்ள சொந்த கிராமமான நாட்டாக்குடி கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி சிவகங்கை சென்று முன்பு தங்கி இருந்த வீட்டின் அட்வான்ஸ் திரும்ப வாங்கி வருவதாக மஞ்சு குழந்தையுடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சந்திரசேகர் மனைவியை காணவில்லை என மஞ்சுவுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது போன் சுவிட்ச் ஆஃப் ஆனதாக கூறப்பட்ட நிலையில், சந்திரசேகர் மீண்டும் இரவில் போன் செய்த போது மனைவி மஞ்சு நான் நாகர்கோவில் வந்து விட்டேன் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். மறுநாள் மஞ்சுவின் தாயார் போன் செய்து உங்கள் குழந்தையை அங்கு தான் விட்டு வந்ததாக, இடத்தையும் கூறியுள்ளார்.
சந்திரசேகரின் தாயார் காளிமுத்து நாட்டாக்குடி கோயில் அருகே பையில் துணி மூடிய நிலையில் எறும்புகளால் சூழ்ந்த ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பின்னர் சந்திரசேகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பையில் வைத்து கண்மாய் அருகே புதைத்து உள்ளார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்த நிலையில், தற்போது மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவ குழுவினர், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். குழந்தை பையில் வைத்து மூச்சுத் திணறி இறந்ததா அல்லது கொன்று பையில் வைத்துள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இறந்த நான்கு மாத ஆண் குழந்தையை பையில் வைத்து புதைக்கபட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கருணைக் கொலை செய்ய வற்புறுத்திய இளைஞர்.. சப்-இன்ஸ்பெக்டர் செய்த அசத்தலான காரியம்! - Sivagangai Youth