ETV Bharat / state

'பர்னஸ் ஆயில் பிசினஸ்'..சதுரங்க வேட்டை பாணியில் 24 லட்சம் மோசடி.. குற்றவாளிக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு!

பர்னஸ் ஆயில் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி 24 லட்சம் பணம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை  பெற்ற சாலமோன் அற்புதராஜ்
தண்டனை பெற்ற சாலமோன் அற்புதராஜ் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 1:02 PM IST

தூத்துக்குடி: மணல் தெருவைச் சேர்ந்தவர் பெர்னி கொரைரா மகன் இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா (42). இவரிடம், திருநெல்வேலி கீழமகாராஜ நகரைச் சேர்ந்த தங்கராஜன் மகன் சாலமோன் அற்புதராஜ் (33) என்பவர் அறிமுகமாகி, தான் அரசு ஒப்பந்ததாரராக வேலை பார்ப்பதாகவும், பர்னஸ் ஆயிலின் விற்பனை நல்ல ஏற்றத்தில் உள்ளதால், பர்னஸ் ஆயிலை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பியா இக்னேஷியஸ் மொத்தம் ரூபாய் 24,05,000 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் சாலமோன் அற்புதராஜுக்கு கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சாலமோன் அற்புதராஜ், பர்னஸ் ஆயிலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தூத்துக்குடி எஸ்பி அதிரடி!

இதுகுறித்து இக்னேஷியஸ் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சாலமோன் அற்புதராஜை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர் நேற்று (அக்.,9) குற்றவாளியான சாலமோன் அற்புதராஜுக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.