தேனி: தேனியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் போடியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு, அந்த விடுதியில் உள்ள 3 சிறுவர்கள் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் பள்ளி முடிந்ததும், விடுதிக்குச் செல்லாமல், போடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், சிறுவனை அழைத்துக் கொண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், குற்றம் சுமத்தப்பட்ட 3 சிறுவர்களையும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கு 15 வயது கூட நிரம்பாத நிலையில், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்கத் தவறிய குற்றத்திற்காக விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாநகர் சிறுமி வழக்கு: காவல்துறை சீரழிந்து கிடப்பதாக அன்புமணி ட்வீட்!