ETV Bharat / state

நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி.. வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேர் கைது! - Private School Money Laundering - PRIVATE SCHOOL MONEY LAUNDERING

தனியார் பள்ளியின் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து, ரூ.12.23 கோடி மோசடி செய்ததாக வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேரை தருமபுரி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 6:14 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளியை துவங்கும்போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில், நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி ரூ.85 லட்சம், மணி ரூ.23 லட்சம, நாகராஜ் ரூ.45 லட்சம், சாமுண்டீஸ்வரி தேவி பாலா ரூ.25 லட்சம், சரவணன் ரூ.25 லட்சம், இளங்கோ ரூ.25 லட்சம், ஸ்ரீதர் ரூ.20 லட்சம், ராமசுந்தரம் ரூ.3 கோடியே 25 லட்சம், ராஜம் என்பவர் ரூ.1 கோடியே 75 லட்சம், கஜேந்திரன் ரூ.3 கோடி, சுரேஷ்குமார் ரூ.1 கோடியே 35 லட்சம் என மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை பங்குத் தொகையாக வசூலித்து பள்ளியை நடத்தி வந்துள்ளனர்.

மேலும், பள்ளியின் பங்குதாரர்களாக வந்தவர்களிடம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஒப்பந்தம் போட்டு, பணம் செலுத்திய பங்குதாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு புதிய சிக்கல்.. கல்வியாளர்கள் வைக்கும் கோரிக்கை!

இத்தகைய சூழ்நிலையில், வசந்தகுமார் என்பவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்த பள்ளியில் ரூ.12.23 கோடி முதலீடு செய்த பங்குதாரர்களை மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் முனிரத்னம் தலைமறைவானார். மேலும், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா (59) மற்றும் அவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீட்டை பெற்று கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் அவரது கணவர் செல்வம் ஆகிய மூன்று பேரையும் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து செய்தனர். மேலும், தலைமறைவான பள்ளியின் தாளாளர் முனிரத்னத்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.