ETV Bharat / state

ஐஆர்சிடிசியின் புனித தலங்களின் யாத்திரை எப்பொழுது தொடக்கம்? முழு விவரங்கள்! - IRCTC Tour Packages

IRCTC Tour Packages: ஐஆர்சிடிசியின் சார்தாம் யாத்திரை செப்டம்பர் 15ல் தொடங்குகிறது என்றும், 2024-2025இல் மேற்கொள்ள வேண்டிய சுற்றுலா விவரங்கள் குறித்தும் ஐஆர்சிடிசி பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐஆர்சிடிசி பொது மேலாளர் ராஜலிங்கம்
ஐஆர்சிடிசி பொது மேலாளர் ராஜலிங்கம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 6:37 PM IST

சென்னை: இந்திய ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு உள்நாட்டு விமான சுற்றுலாக்கள், சர்வதேச விமானப் பயணங்கள், ரயில் சுற்றுலாக்கள் குறித்து ஐஆர்சிடிசி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

இது குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் பேக்கேஜ் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அதில் பேசிய அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜலிங்கம், “2023-24ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசி 57 உள்நாட்டு சுற்றுலாக்களை இயக்கியது. இவை அனைத்தும் தென்னிந்திய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றூள்ளது.

இந்த நிதி ஆண்டில் ஐஆர்சிடிசி 70 உள்நாட்டு சுற்றுலாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இவை பிரதமரின் "தேக்கோ அப்னா தேஷ்" என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. ஐஆர்சிடிசி வருகிற செப்டம்பர் 15ல் சார்தாம் யாத்திரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த யாத்திரையில் தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும். 2024-25 ஆம் ஆண்டில் செர்ரி ப்ளாஸம் (Cherry Blossom) பருவத்தில் ஜப்பான் மற்றும் வசந்த காலத்தில் கிழக்கு ஐரோப்பா, கம்போடியா, வியட்நாமில் உள்ள அங்கோர் வாட்(Angkor Wat) போன்ற 20க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களை திட்டமிட்டுள்ளது.

ஆன்மீக தலங்களுக்கு சிறப்பு ஏற்பாடு: கடந்த 2023 - 24 ஆண்டில் 1,253 சுற்றுலாப் பயணிகள் ஐஆர்சிடிசி மூலம் ரயில் சுற்றுலாக்களை மேற்கொண்டனர். நடப்பு நிதியாண்டில் 385 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே இந்த சுற்றுப்பயணங்களைப் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு 2500 சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவகிரகம் மற்றும் சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வசதிகள்: இந்த சுற்றுலாக்களில் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் 3 டயர் ஏசி ரயில் பயணசீட்டுகள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலாக்கள் வியாழன் மாலையில் புறப்பட்டு திங்கட்கிழமை காலை முடிவடையும். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலாவில் பயணித்து, LTC(Leave Travel Concession)சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

அமர்நாத் யாத்திரை பொருத்தவரையில் ஐஆர்சிடிசி தமிழ்நாடு சுற்றுலாத் துறையுடன் இணைந்து யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் 30 முதல் 40 பயணிகளை அழைத்துச் செல்ல முடியும். இந்த சுற்றுலா 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.இந்த சுற்றுலா பேக்கேஜ் பயன்படுத்த எந்த வித வயது வரம்பும் இல்லை

ஐஆர்சிடிசி - உள்நாடு, சர்வதேச சுற்றுலாவில் அழைத்துச் செல்லப்படும் இடம் மற்றும் பேக்கேஜ் விவரங்கள்

இடங்கள்நாள்தொகை(ஒரு நபருக்கு)
கயா- காசி - அலகாபாத் - அயோத்தியா

ஆகஸ்ட் 3,

செப்டம்பர்1,

அக்டோபர் 1

ரூ.43,500
லே, லடாக்

ஆகஸ்ட் 11,

செப்டம்பர்26

ரூ.57,000
காஷ்மீர்ஆகஸ்ட் 11ரூ.52,500
ஆகஸ்ட் 13
நேபாளம், காட்மாண்டு, பொக்காராஆகஸ்ட் 14ரூ.54,000
பூட்டான் மற்றும் காமாக்யா கோவில் பரோ/புனாகா / திம்பு ஆகஸ்ட் 15ரூ.92,000
இலங்கை, கொழும்பு, நுவரெலியா, கதிர்காம்ஆகஸ்ட் 29ரூ.64,500
குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, நிஷ்கலங்க் மகாதேவ் கோவில், ஸ்ரீ சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில், போர்பந்தர், துவாரகா, மற்றும் அகமதாபாத் ஆகஸ்ட் 30ரூ 43,000
சார்தாம் யாத்திரை செப்டம்பர்15 ரூ.62,900
பிகானர், ஜெய்ப்பூர், ஜெய்சல்மர், புஷ்கர், உதய்பூர்செப்டம்பர் 22ரூ.45,000
புவனேஸ்வர்- பூரி -கோனார்க்- ஒடிசா புவனேஸ்வர், கோனார்க், பூரி ஜகன்னாதர் கோவில், மற்றும் சில்கா ஏரிசெப்டம்பர் 28 ரூ.43,000
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி அமிர்தசரஸ் பொற்கோயில்அக்டோபர் 21ரூ. 52,000
ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits -ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை துவக்கம்.. எங்கெல்லாம் நின்று செல்லும்? - METTUPALAYAM THOOTHUKUDI TRAIN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.