ETV Bharat / state

வேலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நூதன திருட்டு.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி? - Vellore Theft - VELLORE THEFT

Vellore theft: வேலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை உதவி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
வேலூரல் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 10:27 AM IST

Updated : Apr 4, 2024, 11:56 AM IST

வேலூர்: இரத்தினகிரி பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை உதவி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து, இரத்தினகிரி போலீசார் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து, 56 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லேப்டாப், ரூ.95 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த இரத்தினகிரி தென்நந்தியாலம் எஸ்.பி.நகரை சேர்ந்தவர் சிட்டிபாபு (62). இவர் வேலூர் கோனாவட்டம் போக்குவரத்து பணிமனையில், உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 28 ஆம் தேதி உறவினரது இறுதிச்சடங்கிற்காக குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.

இந்நிலையில், அன்று மாலை அவரது வீட்டு வாசலில் வழக்கமாக கோலம் போடுவதற்கு வரும் பணிப்பெண் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சிட்டிபாபுவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சிட்டிபாபு குடும்பத்தினர் அன்று இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்த நிலையில் இருந்துள்ளன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த நிலையில், பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கைப்பட்டிருந்த 200 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, சிட்டிபாபு இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள், வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிட்டிபாபு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, ஆடு திருடிய வழக்கில் கைதான அய்யப்பன் (24) என்பவர் கைரேகையும் ஒத்துப்போய் உள்ளன. மேலும், இரத்தினகிரியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய முகங்களும் ஒத்துப்போய் உள்ளன.

இதனையடுத்து, போலீசார் செஞ்சியில் இருந்த அய்யப்பனை கைது செய்து அவரிடமிருந்து, வெள்ளி பொருட்கள், லேப்டாப் மற்றும் 10 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அய்யப்பன் அவரது கூட்டாளியான கண்ணதாசனுடன்(27), செம்மரம் வெட்டுவதற்காக, ஆந்திர மாநிலத்திற்கு கடந்த 23ஆம் தேதி சென்றுள்ளனர். அங்கு, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் டிவிஎஸ் 50 வண்டியில் திரும்பி வந்துள்ளனர்.

23ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து புறப்பட்டவர்கள் கடந்த ஐந்து நாட்களாக வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சுற்றித்திரிந்துள்ளனர். இதனையடுத்து, 28ஆம் தேதி மாலை சிட்டிபாபு வீட்டின் பூட்டை உடைத்து, 200 சவரன் நகைகள் கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடலூர் சிறையில் இருக்கும் போது நண்பர்களாகியுள்ளனர். ஜாமினில் வெளிவந்த இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான கண்ணதாசனை பிடிப்பதற்காக, கைது செய்யப்பட்ட அய்யப்பன் மூலமாக போலீசார் போன் செய்த நிலையில், நகைகளை நாம் இருவரும் பிரித்துக் கொள்ளலாம், நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டுற்குச் சென்ற நிலையில் அவர் தாயாரின் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்து வந்த போலீசார் கண்ணதாசனை கைது செய்து, அவரிடமிருந்து 45 சவரன் தங்க நகை, ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 200 சவரன் கொள்ளைப்போன வழக்கில், இருவடிடமிருந்து, மொத்தம் 56 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லேப்டாப், ரூ. 95 ஆயிரம் ரொக்கம் மட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கண்ணதாசன் செஞ்சி சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாராயம் விற்று, அடிக்கடி கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடிகள் பட்டியலில் அவர் பெயர் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயம் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 4, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.