ETV Bharat / state

பாளையங்கோட்டையில் 2 இளைஞர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு - PALAYAMKOTTAI YOUTHS DIED - PALAYAMKOTTAI YOUTHS DIED

Tirunelveli youths death issue: திருநெல்வேலி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்களில், 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli youngsters death
Tirunelveli youngsters death
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 12:32 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அண்ணாநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாசானம். இவரது மகன் சுடலைமணி(27). இவரும், பாளையங்கோட்டை சக்தி நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மகாராஜன்(29) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருண்(25) ஆகிய மூவரும் நண்பர்கள்.

இவர்கள், நேற்று பாளையங்கோட்டை - திருச்செந்தூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் பள்ளியின் எதிரே தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்த மூவரில் மகாராஜனுக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், மூன்று பேரும் கிணற்றுக்குள் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக மகாராஜன் திடீரென தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை காப்பாற்ற சுடலை மணி போராடியுள்ளார். ஆனால், அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த அருண், உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் மூழ்கிய சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேரையும் நீண்ட நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர்.

பின்னர், இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "கடந்த முறை கோபேக் மோடி; இந்த முறை கெட்அவுட் மோடி" - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.