ETV Bharat / state

சென்னையில் ஆட்டோவை அபேஸ் செய்த சிறுவன் உள்ளிட்ட 2 பேர் முதல் வழிப்பறி செய்தவர் கைது வரை - சென்னை குற்றச் செய்திகள் - Chennai Crime News - CHENNAI CRIME NEWS

Chennai Crime News: சென்னையில் ஆட்டோவை திருடிய 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். இதேபோல, வடமாநில தொழிலாளரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Two youngsters arrested for auto theft in Chennai
திருடப்பட்டு மீட்கப்பட்ட ஆட்டோ மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 7:40 AM IST

சென்னை: மயிலாப்பூர் வடக்கு, சித்திரை குளம் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (50) ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒருவரை சவாரிக்கு அழைத்து வந்து இறக்கிவிட்டு வேறு சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் பாண்டியனிடம் தகராறு செய்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பாண்டியன் பணம் தர மறுத்ததையடுத்து, இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.200 பணம் மற்றும் ஆட்டோவை அங்கிருந்து திருடி சென்றனர்.

இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாண்டியனைத் தாக்கிவிட்டு ஆட்டோவை திருடி சென்றது கோயம்பேடு சேமாத்தம்மன் நகரை சேர்ந்த ஏபெல் (19), மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல, அவர்கள் வேறு எங்கும் வழிப்பறியில் ஈடுபட்டனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வளசரவாக்கத்தில் பிடிபட்ட வழிப்பறிக் கொள்ளையன்: சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் கண்டவர் திலீபர் ஓசேன் (25) என்ற வட மாநில தொழிலாளி கட்டிட வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 19ஆம் தேதி அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ரூ.8,150 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்திய வளசரவாக்கம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட விஜயகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளியையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர் தரப்பில் இருந்து வளசரவாக்கத்தில் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வழிப்பறி கொள்ளையர்கள் யார் என தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி, வழிப்பறியில் ஈடுபட்ட ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் பசிக்கும் விஜயகுமார் (21) இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இவரது கூட்டாளியையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பெண்கள் விடுதியில் நள்ளிரவில் புகுந்த திருடன்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - Theft In Govt Ladies Hostel

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.