ETV Bharat / state

பெற்றோர் எதிர்ப்பை மீறி காவல் நிலைய வாசலில் தாலி கட்டிய 19 வயது இளைஞர்.. மயிலாடுதுறையில் பரபரப்பு! - Mayiladuthurai Youth Marriage Issue - MAYILADUTHURAI YOUTH MARRIAGE ISSUE

Mayiladuthurai Youth Marriage Issue: மயிலாடுதுறையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காவல் நிலைய வாசலிலேயே 19 வயது இளைஞர், தான் காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெற்றொர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் பெற்றோர் மற்றும் மயிலாடுதுறை காவல் நிலையம் புகைப்படம்
பெண்ணின் பெற்றோர் மற்றும் மயிலாடுதுறை காவல் நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 2:58 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 வயது ஜெயலட்சுமி என்ற இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஜெயலட்சுமி மயிலாடுதுறையில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே இந்த காதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர, ஜெயலட்சுமியை வேலையில் இருந்து நிறுத்தி, வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.

புகார் அளித்தவர்களின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பெண்ணின் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், அந்த குற்றத்திற்காக இளைஞரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இளைஞர் ஜாமினில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெயலட்சுமியின் பெற்றோர் அவரை வேலைக்காக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அப்பெண் சென்ற சில நாட்களிலேயே யாரிடம் சொல்லாமல் அங்கிருந்து, மயிலாடுதுறையில் உள்ள தனது காதலன் வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் வீட்டார், தங்களது ஜெயலட்சுமியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், நேற்று இரு தரப்பினரையும் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில் இருவருக்கும் 19 வயதுதான் என்பது தெரிய வந்ததால், இன்னும் 2 வருடங்கள் முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என இளைஞருக்கு அறிவுரை வழங்கிய போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த இளைஞரோ காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து காவல் நிலையம் வாசலிலேயே ஜெயலட்சுமிக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார், "போதைப் பழக்கமும், குற்ற வழக்குகளும் உள்ள அந்த பையனுக்கு தங்களது மகளைக் கொடுத்தால், கொன்று விடுவான் எனவும், ஆகையால் தங்களது மகளை மீட்டு தங்களிடமே ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் புகார் அளித்துள்ளனர். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்களின் திருமண வயது 21 எனச் திருமணச்சட்டம் உள்ள நிலையில், திருமண வயதைத் தாண்டுவதற்குள்ளேயே, காவல் நிலைய வாசலில் வைத்து மஞ்சள் கயிற்றைக் கட்டி, தனது காதலியை இளைஞர் திருமணம் செய்து அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: "முதலமைச்சர் கையால் தங்கச்சங்கிலி காத்திருக்கு" - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.