ETV Bharat / state

சென்னை விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்! - chennai air show 2024 - CHENNAI AIR SHOW 2024

விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரை குவிந்த மக்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள்
மெரினா கடற்கரை குவிந்த மக்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 3:48 PM IST

சென்னை: இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. விடுமுறை தினம், சென்னையில் நடக்கும் மிகப்பெரிய விமான நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், காலை முதலே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில் மெரினா கடற்கரையில் திரண்டனர்.

நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் சென்னை மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 15 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றது.

மெரினாவில் குவிந்த குப்பை: சுட்டெரிக்கும் வெயிலும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்களின் பாட்டில்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகளை அங்கே விட்டுச் சென்று விட்டன.இதனால் மெரினா கடற்கரை முழுவதும் குப்பை குளமாக காட்சியளித்தது.

இதையும் படிங்க: விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

களத்தில் தூய்மை பணியாளர்கள்: சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் விமான கண்காட்சிக்கு முன்னரும் கண்காட்சி நடைபெற்ற பின்னரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மெரினா கடற்கரை முழுவதும் 128 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் காமராஜர் சாலையில் 28 பணியாளர்கள், நிகழ்ச்சி நடந்த கேலரி பகுதியில் 8 பணியாளர்கள், மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் 17 பணியாளர்களும் மற்றும் மக்கள் அதிகம் கூடிய மணற்பரப்பில் 30 பணியாளர்களும் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற முக்கிய பகுதிகளில் 45 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் சென்ற பிறகு அங்கே இருந்த குப்பைகளை 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் உதவியுடன் முழுவதும் அப்புறப்படுத்தினர். நேற்று மட்டும் மெரினா கடற்கரையில் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 4 டன் வரை டெட்ரா பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.