திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஜேசிஐ கிளப் சேவை அமைப்பின் சார்பில் 16 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து அனைவருக்கும் சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து மதத்தைச் சேர்ந்த 12 ஜோடிகளுக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்த இரண்டு ஜோடிகளுக்கு கிருஸ்த்துவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மேடையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இரண்டு ஜோடிகளுக்கு மசூதியில், இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க : "தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை தமிழ்நாடு எப்போதோ அடைந்துவிட்டது" - விஐடி வேந்தர் பெருமிதம்! - VIT Chancellor Viswanathan on NEP
பின்னர் மேடையில் 16 ஜோடிகளுக்கும் தாலி, புடவை, மெத்தை, பாத்திரங்கள் என திருமண சீர்வரிசைகளை ஜேசிஐ அலுமினி சங்க நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார், நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், ஜேசிஐ கிளப் சேவை அமைப்பின் நிர்வாகிகள், மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.