சென்னை: தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்துறை முதன்மை செயலாளராக பதவிவகித்து வந்த அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1.தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், தமிழகத்தின் புதிய உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
3.சிட்டோ நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்துவந்த மதுமதி, பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக இருந்த ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5.தொழிலாளர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த குமார் ஜெயந்த், தகவல் தொழில்நுட்ப துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6.தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையராக இருந்த வீர ராகவ ராவ், தொழிலாளர் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7.தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த சுரேஷ் குமார், சிறுபான்மையினர் நலத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8.திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப், நிதித் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ்.வளர்மதி, சமூக நலத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணு சந்திரன், பொதுத் துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம்
11. அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா உள்துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
12. கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த ஷ்வரன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு துறை இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை, வருவாய், கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்!