ETV Bharat / state

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

12th hall ticket: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 7:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெறவுள்ளது. அதே போல் 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ந் தேதி முதல் ஏப்ரல் 8ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நடத்திட உள்ளது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பிப்.20ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "12 ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு, பள்ளி தலைமையாசிரியர்கள் 20ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், வரும் 19்ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு" - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.