ETV Bharat / state

ஈரோடு: பழங்குடி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. உயிரை பணயம் வைத்து பரிசலில் சென்று உதவிய செவிலியர்!

பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை பாதுகாப்பாக பரிசலில் அழைத்துச் சென்ற செவிலியருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

கர்ப்பிணியை பரிசலில் அழைத்து செல்லும் காட்சி
கர்ப்பிணியை பரிசலில் அழைத்து செல்லும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: பவானிசாகர் மற்றும் முதுமலை வனத்தில் தெங்குமரஹாடா, அல்லிமாயார், கல்லம்பாளையம், சித்திரம்பட்டி, புதுக்காடு உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த வனக் கிராமங்களுக்கு நடுவே ஓடும் மாயற்றை பரிசலில் கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் பவானிசாகர் வனத்தில் உள்ள புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்பவரது மனைவி சினேகா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன் தினம்(அக்.14) காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

புதுக்காடு கிராமம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மாயாற்றை பரிசலில் கடந்து தான் செல்ல வேண்டும். இதற்கிடையே, தெங்குமரஹாடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர் விமலா உடனடியாக சினேகாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு கல்லாம்பாளையம் பகுதியில் ஓடும் மாயாற்றை கடப்பதற்காக பரிசலில் கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக ஏற்றி ஆற்றை கடந்து வந்தனர்.

இதையும் படிங்க : குறைந்தது கனமழை; வழக்கம்போல நம்பிக்கையுடன் கண்விழித்த சென்னை!

பின்னர் மாயாற்றின் மறுகரையில் நிறுத்தி வைத்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உமா சங்கர், அவசர கால மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கர்ப்பிணியை பாதுகாப்பாக ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவ வார்டில் சேர்த்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக அழைத்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், துரிதமாக செயல்பட்ட தெங்குமரஹாடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர் விமலாவுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.