ஐதராபாத்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி பிரிஸ்பேனில் இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், 15 வீராங்கனைகள் கொண்ட ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய மகளிர் அணியில் மூன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மொத்தமாக ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 டி20 போட்டிகளிலும், 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்த 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிப்யா சியன், சமாரா டல்வின், மற்றும் ஹசரத் கில் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். செப்டம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிரை எதிர்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்திரேலிய மகளிர் களம் காணுகின்றனர்.
தொடர்ந்து இதேபோல் மேலும் இரண்டு ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் இலங்கை அணியை ஆஸ்திரேலிய மகளிர் அணி எதிர்கொள்கிறது. பொதுவாக ஆஸ்திரேலிய அணியில் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இணைவது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:
டி20 அணி: போனி பெர்ரி, கயோம்ஹே ப்ரே, எல்லா பிரிஸ்கோ, மேகி கிளார்க், சமாரா டல்வின், லூசி ஃபின், ஹசரத் கில், லூசி ஹாமில்டன், ஆமி ஹண்டர், எலினோர் லரோசா, இன்ஸ் மெக்கியோன், ரிப்யா சியன், டெகன் வில்லியம்சன், எலிசாப் ஹய்ச்லி, எலிசாப்.
50 ஓவர் அணி: போனி பெர்ரி, கயோம்ஹே ப்ரே, எல்லா பிரிஸ்கோ, மேகி கிளார்க், சமாரா டல்வின், லூசி ஃபின், ஹசரத் கில், ஆமி ஹண்டர், எலினோர் லரோசா, இனெஸ் மெக்கியோன், ஜூலியட் மார்டன், ரிப்யா சியன், டீகன் வில்லியாம்சன், டெகன் வில்லியாம்சன்.
இதையும் படிங்க: ஒரு ஸ்டிக்கருக்கு இத்தனை கோடியா? பேட் ஸ்பான்ஷர்ஷிப் மூலம் ரோகித் சர்மா பெறும் தொகை எவ்வளவு தெரியுமா? - Rohti Sharma Bat Sponsorship