ETV Bharat / sports

டாஸ் வென்று பெங்களூரு பந்துவீச்சு தேர்வு! உள்ளூரில் சாதிக்குமா குஜராத்! - IPL 2024 GT vs RCB Match Highlights - IPL 2024 GT VS RCB MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 3:08 PM IST

Updated : Apr 28, 2024, 4:09 PM IST

அகமதாபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.28) மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அதில் 5-ல் தோல்வியும் 4-ல் வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் பாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய 9 போட்டிகளில் 7ல் தோல்வியும் 2-ல் மட்டும் வெற்றி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி கடைசியாக சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரின் பிளே ஆப் சுற்றில் பெங்களூரு அணி தொடர வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் மட்டுமின்றி இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் அந்த அணி உள்ளது.

அதேநேரம் குஜராத் டைட்டனஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள குஜராத் அணி இனி வரும் ஆட்டங்களில் வென்றால் மட்டும் பிளே ஆப் சுற்றில் நீடிக்க முடியும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும், உள்ளூர் போட்டி நடைபெறுவதால் குஜராத் அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் பெங்களூரு அணி 1-ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

இதையும் படிங்க : குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர்சிபி! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே? ஒரே நாளில் 2 போட்டிகள்! - IPL 2024

Last Updated : Apr 28, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.