ஐதராபாத்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
கேப்டன் தோனி தலைமையில் முதல் முறையாக இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதன்பின் ஏறத்தாழ 17 ஆண்டுகள் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பைக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் ஒரு உலகக் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு வெறும் 26 வயதே ஆன மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்காக கோப்பை வென்று தந்தார். தற்போது 37 வயதான ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு கோப்பை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதன் மூலம் அதிக வயதில் உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெறுவார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி உலக கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வெல்லும் என ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. மேலும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைக்க உள்ளார்.
இதையும் படிங்க: India vs South Africa: ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட்- முதல் இன்னிங்சில் 604 ரன்கள் குவித்த இந்திய மகளிர்! - India vs South Africa womens test