ETV Bharat / sports

ஃபார்முலா4 கார் பந்தயம் தொடங்குவதில் திடீர் சிக்கல்.. காரணம் என்ன? - FORMULA 4 CAR RACE CASE - FORMULA 4 CAR RACE CASE

FIA CERTIFICATE DELAYS FORMULA 4 CAR RACE: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்ததுவதற்காக சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) அனுமதி சான்றிதழ் பெறுவதில் தாமதமாவதால் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கார் பந்தைய வீரர்கள், கார் பந்தயம் கோப்புப் படம்
கார் பந்தைய வீரர்கள், கார் பந்தயம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 4:20 PM IST

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதேபோல், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி அரசுத் தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

ஆனால், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) அனுமதியை பெற்றபின் தான் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த முடியும். சென்னை இரவு நேர கார் பந்தயத்திற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) சான்றிதழைப் பெற முடியவில்லை. இதனால் கார் பந்தயம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காலை 11.30 மணிக்கு கார் பந்தயம் நடைபெறும் சாலையில் ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆய்வும் இதுவரை நடைபெறவில்லை. ஆய்வு முடிந்த பிறகு தான் பயிற்சியும் நடைபெறும், அதன்பின் தான் போட்டி தொடங்கும், ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

போட்டி நடைபெற தாமதம் ஏற்படுவதால் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து காத்திருந்த சர்வதேச ட்ரைவர்கள் தங்களின் அறைக்கே திரும்பிச் சென்றுள்ளனர். இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது.

இந்நிலையில் இதன் 2வது சுற்று போட்டி சென்னையில் நாளை நடைபெறும். பின் 3வது சுற்று போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, 4வது மற்றும் 5வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. ஃபார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஃபார்முலா 4 கார் பந்தயம்; எப்ஐஏ சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.