ஐதராபாத்: குவாத்தமாலா (Guatemala) இது யாரோ ஒருவருடைய பெயராக தான் இருக்கும் என தோன்றுகிறதா. இது நபரின் பெயர் இல்லை இது ஒரு நாட்டின் பெயர். குவாத்தமாலா என ஒரு நாடு இருக்கிறதா, இப்ப ஏன் குவாத்தமாலா பற்றி பேசுகிறோம், ஏனென்றால், ஒரு பெண் இந்த நாட்டின் பெயரை பேச வைத்துள்ளார்.
மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் இந்த குவாத்தமாலா. ஏறத்தாழ 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறது. குவாத்தமாலா நாட்டை பற்றி இப்பொழுது பேச என்ன காரணம். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
Adriana Ruano makes history for Guatemala! 🇬🇹🥇 The shooter is the first gold medallist and the first female medallist for her country.
— The Olympic Games (@Olympics) August 1, 2024
Her journey to Paris 2024 glory is an incredible one, including a completely different sport and an eye-opening experience as a volunteer at… pic.twitter.com/BfIJg6mgH8
ஒலிம்பிக்கில் குவாத்தமாலா நாட்டை சேர்ந்த அட்ரியானா ருவானோ (வயது 29) என்ற வீராங்கனை துப்பாக்கிச் சுடுதலில் தங்க பதக்கம் வென்றதே இந்த நாட்டை பற்றி பேச வைத்துள்ளது. குவாத்தமாலாவுக்கான தேசிய ஒலிம்பிக் கமிட்டி 1947 இல் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மூலம் அங்கீகரிக்கவும் பட்டது. 1947 அங்கீகாரம் கிடைத்தாலும் 1952ஆம் ஆண்டு தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியது.
குவாத்தமாலா ஒலிம்பிக் வரலாறு:
ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வு பெற முடியாததால் அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிக்கு தகு பெற முடியாமல் போனது. குவாத்தமாலா 1968 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதேநேரம் 1988 ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
குவாத்தமாலா நாடு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தான் முதல் முறையாக ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது. 2012 கோடைகால ஒலிம்பிக்கின் போது , ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் எரிக் பரோண்டோ இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளி பக்கத்தை வென்றார்.
இந்த நாட்டின் இரண்டாவது பதக்கம் 12 ஆண்டுகள் கழித்து தற்போது பாரிசில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் ஆண்கள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் ஜீன் பியர் ப்ரோல் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் பதகத்தை வென்றுள்ளார். மூன்றாவது பதக்கம் மற்றும் முதல் தங்கப் பதக்கத்தை பாரீஸ் 2024 இல் பெண்கள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் அட்ரியானா ருவானோ வென்றிருக்கிறார். இறுதிப் போட்டியில் 45/50 என்ற கணக்கில் ஷூட் செய்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.
யார் இந்த அட்ரியானா ருவானோ:
அட்ரியானா ருவானோ சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் முதலில் தேர்வு செய்து பயிற்சி பெற்ற விளையாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் தான். 2010 ஆண்டு பான் அமெரிக்கன் சாம்பியன்ஷிப் மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் விளையாட்டுகளில் குவாத்தமாலாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றார்.
2012 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நடந்த தகுதிப் போட்டியான 2011 உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் பயிற்சியின் போது ருவானோ தனது முதுகில் வலியை உணர்ந்தார். மருத்துவ பரிசோதனைக்கு பின் அவர் தனது முதுகில் ஆறு முதுகெலும்புகள் தேசமடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
விளையாட்டில் சாதிக்க விரும்பிய ருவானோ விளையாட்டில் இருந்து விலகாமல் தனது உடல் நிலைக்கு ஏற்றார் போல் வேறு விளையாட்டு போட்டியை தேர்ந்தெடுத்து கடுமையான பயிற்சியுடன் விளையாட தொடங்கினார். 2023ஆம் ஆண்டு சிலி நாட்டின் சாண்டியாகோவில் நடந்த பான் அமெரிக்கன் கேம்ஸ் பெண்கள் ட்ராப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
அந்த நேரத்தில், குவாத்தமாலா நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடைநீக்கம் செய்ததால் அவர் சுதந்திர வீரர்களுக்கான அணியில் பங்கேற்று விளையாடினார். தன் நாடான குவாத்தமாலாவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றாலும் தன் தனி திறமையால் ருவானோ பாரீஸ் ஒலிம்பக்கில் தன் நாட்டிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்து சரித்திர சாதனை படைத்துள்ளார்.
குவாத்தமாலா நாட்டினர் எத்தனை ஒலிம்பிக் போட்டிகள் கடந்து சென்றாலும், எவ்வளவு பதக்கம் பெற்றாலும் தன் நாட்டிற்காக முதல் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்த தங்க மங்கை அட்ரியானா ருவானோவை என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 9வது முறையாக உலக சாதனை முறியடிப்பு! பாரீஸ் ஒலிம்பிக்கை கலக்கிய அவர் யார்? - Paris Olympics 2024