ETV Bharat / sports

ராஜஸ்தான் வீழ்ச்சியும் ஹைதராபாத் அணியின் எழுச்சியும் - ஐபிஎல் போட்டி அலசல்! - SRH VS RR QUALIFIER 2 - SRH VS RR QUALIFIER 2

SRH VS RR QUALIFIER 2: குவாலிபையர் 2 போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதில் ராஜஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கான காரணம் குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்

ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் அணி வீரர்கள்
ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் அணி வீரர்கள் (Credits - IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 12:22 PM IST

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடர் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஏன் என்றால் முதல் பாதியில் இந்த அணிதான் கோப்பையை வெல்லும் என நினைத்துக் கொண்டு இருந்த வேளையில், இரண்டாம் பாதியில் அந்த அணி பிளே ஆஃப் செல்லுமா? அப்படியே சென்றாலும் கோப்பை வெல்லுமா என பலரையும் யோசிக்க வைத்து விட்டது.

அந்த அணி வேறு ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸ்தான். இந்த 17வது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விளையாடிய 9 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ராஜ நடைபோட்டுக் கொண்டு இருந்த ராயல்ஸ்க்கு யார் கண்ணு பட்டுச்சோ தெரியல? அடுத்து விளையாடிய 5 போட்டியில் 4 தோல்வி.

இதனால் பாயிண்ட்ஸ் டேபிள் 2வது இடத்திற்கு ஈசியா போக வேண்டிய அணி தட்டுத்தடுமாறி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்.

இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால்? ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்றில் விளையாடி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற எந்த அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது. இந்த மோசமான வரலாற்றை ராஜஸ்தான் மாற்றி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டி தொடங்கப்பட்டது.

டிரெண்ட் போல்ட், அவேஷ் கான் தப்பித்த ராஜஸ்தான்: ஹைதராபாத் அணி கடப்பாரை பேட்டிங் லைன் அப்பை கொண்டுள்ளது என எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, அந்த அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வது சிறந்தாக இருக்கும் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்க அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

எப்படியும் 200 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள் என எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கடப்பாரை பேட்டிங்கை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இதில் மாஸாக விளையாடிய ஹென்ரிக் கிளாசென் 34 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ராஜஸ்தானை சுருட்டிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 176 ரன்களை சுலபமாக கடந்த விடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதலில் சற்று சுமாரான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் டிம்-கோலர் 10 ரன்கள் அடித்து ஏமாற்றினார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 42 ரன்களில் ஷபாஷ் அகமது வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அபிஷேக் சர்மா, மற்றும் ஷபாஷ் அகமது ஆகியோர் சேர்ந்து வெளியேற்றினர். இரண்டு ஸ்பின்னர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அவ்வளவுதான் மேட்ச் முடிந்துவிட்டது என நினைத்தபோது ஒன்றை ஆளாக போராடினார் துருவ் ஜூரல். களத்தில் நின்று அரைசதத்தை கடந்து 56 ரன்களை எடுத்து அசத்தினார்.

போட்டியின் கடைசி வரை திக் திக் என்று சென்றுக் கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் 7 பந்துகளில் 42 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது பேட் கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை போல்ட் மிஸ் செய்தார். அப்போதுதான் ஹைதராபாத் அணி வெற்றியே உறுதியானது போல் இருந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்ததோடு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஹைதராபாத் அணி.

காவ்யா மாறன்: "ஐபிஎல் நல்லா போயிகிட்டு இருக்கு. சன்ரைசர்ஸ் மேட் ஆடும்போது காவ்யா மாறனின் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கும்போது நமக்கும் டென்ஷன் ஆகிறது. காவ்யாவை பார்க்கும்போது நமக்கு பி.பி. ஏறிவிடுகிறது" என மேடை ஒன்றில் ரஜினிகாந்த் கூறியது போலதான் இருந்தது நேற்றைய போட்டியில் காவ்யா மாறன் கொடுத்த எக்ஸ்பிரஷன். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் மேட்ச் வெற்றி பெற்றதும் "காவ்யா மாறன் ஹேப்பி அண்ணாச்சி" என்ற மீம்ஸ்களை பகிர்ந்தனர்.

பேட் கம்மின்ஸ்: ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களுள் ஒருவராக வலம் வரும் பேட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு காவ்யா மாறன் ஏலம் எடுத்தபோது அதை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட் கம்மின்ஸ் தூணாக இருந்து ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று காவ்யா மாறனின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஷஸ் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக்கோப்பை என 3 கோப்பைகளை தான் வசப்படுத்திய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று தருவாரா என்பதை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியின் முடிவுக்கு பின்னர் பார்ப்போம்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை.. 'வெளிச்சம் பெறாத கற்பகவிருட்சம்' தினேஷ் கார்த்திக் என ரசிகர்கள் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.