ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றதன் மூலம் இணையத்தின் சென்ஷேசனாக மாறியவர் தான் துருக்கி நாட்டை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் யுசுப் டிகெக்.
மற்ற வீரர்கள் போல் இல்லாமல் எந்தவொரு பாதுகாப்பு கவசங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் என எதுவும் அணிந்து கொள்ளாமல் ஒற்றை கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு இலக்கை குறி வைத்து அடுத்தடுத்து சுட்டுத் தள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றவர் தான் யுசுப் டிகெக்.
Hi Elon, do you think future robots can win medals at the Olympics with their hands in their pockets?😎🇹🇷 How about discussing this in Istanbul, the cultural capital that unites continents? @elonmusk pic.twitter.com/BR5iJmNOHD
— Yusuf Dikec (@yusufdikec) August 4, 2024
அவரது புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது. அப்படி இன்டர்நெட் சென்ஷேசனான யுசுப் டிகெக் தற்போது மற்றொரு காரணத்திற்காக மீண்டும் சென்ஷேசனாக மாறி உள்ளார். அண்மையில் எக்ஸ் வலைதளத்தில் இணைந்த யுசுப் டிகெக், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
தற்போது அந்த கேள்வி தான் வைரலாக பரவி வருகிறது. தனது பதிவில், வருங்காலத்தில் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு ரோபோக்கள் துப்பாக்கியால் சுடுமா, எதிர்காலத்தில் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரோபோக்கள் கலந்து கொண்டு பதக்கம் வெல்லுமா, இது குறித்து கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரான இஸ்தான்புல்லில் விவாதிப்போமா? என்று யுசுப் டிகெக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், யுசுப் டிகெக்கின் கேள்விக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்து உள்ளார். அந்த பதிவில், இஸ்தான்புல் நகருக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் உலகின் தலை சிறந்த நகரங்களில் அதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். விரைவில் ஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள் கலந்து கொள்வதை பார்க்கலாம் என நெட்டிசன்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அது எப்படி திமிங்கலம்? ஆடவர், மகளிர் படகு போட்டியில் பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர்! - paris Olympic 2024