ஐதராபாத் : அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக வதந்தி பரவி வந்த நிலையி அதனை தற்போது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நண்பருமான ஏபி டி விலியர்ஸ் உறுதிபடுத்தி உள்ளார். அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த ஆண்டு தங்களது 2வது குழந்தையை எதிர்நோக்கி உள்ளதாக டிவிலியர்ஸ் தனது யூடியூப் சேனலில் தெரிவித்து உள்ளார்.
டிவிலியர்ஸ் தன்னை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நிகழ்வு நிகழ்த்தினார். அதில், ஒருவர் விராட் கோலியைப் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது தான் டிவிலியர்ஸ், விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினர் குறித்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்த உரையாடலில், "நான் கோலிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது தான் இதனை அறிந்து கொண்டேன். என்னால், அதிகளவில் எந்த செய்தியும் தர முடியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் நலமாக இருக்கிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாததற்கு இதுதான் காரணம்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் இந்திய அணியில் இடம் பெறாததற்கும் இதுதான் காரணம்" என்று தெரிவித்து உள்ளார். அதேநேரம் அனுஷ்கா சர்மா கர்ப்பம் குறித்து விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி அவலுடன் காத்திருக்கின்றனர். 2017ஆம் ஆண்டு விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு தங்களுடைய முதல் குழந்தையான வாமிகாவை வரவேற்றனர்.
தங்களுடைய குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளை கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி விமரிசையாக கொண்டாடிய நிலையில், விரைவில் அடுத்த குழந்தை குறித்த கிசுகிசு வெளியாகி உள்ளது. முதல் குழந்தை பிரசவத்தின் போது கடந்த 2021ஆம் ஆண்டு அனுஷ்கா சர்மாவுடன் இருப்பதற்காக இதேபோல் கிரிக்கெட் தொடரை பாதியில் கைவிட்டு விராட் கோலி சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “நாங்களும் ஆட்டத்துக்கு வரலாமா..” இலங்கை-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் குறுக்கிட்ட உடும்பு!