சண்டிகர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் ஜிந்து மாவட்டத்தில் உள்ள ஜூலானா தொகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இந்திய விமானப் படை கமாண்டரும் பாஜக வேட்பாளருமான யோகேஷ் குமார் தோல்வியை தழுவினார்.
வினேஷ் போகத் வெற்றி! #etvbharat #etvbharattamil #vineshphogat #HaryanaAssemblyElection2024 #harayanaelectionresult pic.twitter.com/IKmbI11epX
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 8, 2024
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முன்னிலை வகித்த வினேஷ் போகத், இடையிடையே பின் தங்கினார். இருப்பினும், 8வது சுற்றில் 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
देश की बेटी विनेश फोगाट को जीत की बहुत बहुत बधाई।
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) October 8, 2024
यह लड़ाई सिर्फ़ एक जुलाना सीट की नहीं थी, सिर्फ़ 3-4 और प्रत्याशियों के साथ नहीं थी, सिर्फ़ पार्टियों की लड़ाई नहीं थी।
यह लड़ाई देश की सबसे मज़बूत दमनकारी शक्तियों के ख़िलाफ़ थी। और विनेश इसमें विजेता रही।#VineshPhogat… pic.twitter.com/dGR5m2K2ao
இதையும் படிங்க: சின்ன சேஞ்ச்.. எகிறும் விராட் கோலியின் சம்பளம்! என்ன காரணம்?