டெல்லி: தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய ரயில்வே பணியில் இருந்து விலகுவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், குறிப்பிட்ட எடையை விட 100 கிராம் கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து சர்வதேச விளையாட்டுக்காக நடுவர் மன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிர்த்து முறையிட்ட வினேஷ் போகத்தின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்சில் பதக்க வாய்ப்பை இழந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெறுங்கையுடன் நாடு திரும்பினார். இருப்பினும், அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சொந்த கிராமம் வரை மக்கள் வழிநெடுக காத்திருந்து வரவேற்றனர்.
भारतीय रेलवे की सेवा मेरे जीवन का एक यादगार और गौरवपूर्ण समय रहा है।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 6, 2024
जीवन के इस मोड़ पर मैंने स्वयं को रेलवे सेवा से पृथक करने का निर्णय लेते हुए अपना त्यागपत्र भारतीय रेलवे के सक्षम अधिकारियों को सौप दिया है। राष्ट्र की सेवा में रेलवे द्वारा मुझे दिये गये इस अवसर के लिए मैं… pic.twitter.com/HasXLH5vBP
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அதையடுத்து இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், அரசியலில் குதிக்கப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
மேலும், அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் இருவரும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைவதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு ரயில்வேயில் சிறப்பு பணி அதிகாரியாக வினேஷ் போகத் பணியாற்றி வந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வினேஷ் போகத், இந்திய ரயில்வேயில் பணியாற்றியதை மறக்க முடியாத தருணமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன், எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரயில்வே வேலையில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்து, எனது ராஜினாமாவை இந்திய ரயில்வே அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என்று வினேஷ் போகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: Vinesh Phogat: காங்கிரசில் இணைந்த வினேஷ், பஜ்ரங்! ஹரியானா தேர்தலில் போட்டி! - Vinesh Bajrang joins Congress