டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதி போட்டி வரை சென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் முடிவு காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் தகுதி நீக்கம் உத்தரவை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். முதலில் தகுதி நீக்கம் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வினேஷ் போகத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதன் பின் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நடுவர் நீதிமன்றம், இன்று இரவு 9.30 மணிக்கு இறுதித் தீர்ப்பை வெளியிடுகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தை வினேஷ் போகத் காலி செய்தார்.
தொடர்ந்து இன்று (ஆக.13) வினேஷ் போகத் நாடு திரும்புகிறார். டெல்லி விமான நிலையம் அவர் வரும் நிலையில் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிய மனுவில் இரவு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு! ஓய்வு குறித்து கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறியது என்ன? - Mens Hockey team in delhi