ஹைதராபாத்: கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த பிப்ரவரி 2 முதல் 18-ஆம் தேதி வரை உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் அணி ஏ ஆர் ரஹ்மானின் பாடலுக்கு சாகசம் நிகழ்த்திய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்க நீச்சல் வீராங்கனைகள் கடந்த 1991ஆம் ஆண்டு சுபாஷ் காய் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான தால் சி தால் பாடலுக்கு சாகசம் நிகழ்த்தினர். குறிப்பாக பாடலுக்கு ஏற்ப, அமெரிக்கா வீராங்கனைகள் நீச்சல் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.
A USA artistic swimming team used @arrahman's Taal se Taal song for their performance. pic.twitter.com/mAeYZWK3sX
— A.R.Rahman Loops (@ARRahmanLoops) August 4, 2024
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் அறிமுகத்திற்காகவும் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தோஹாவில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த பாடலுக்கு ஏற்றார் போல் அமெரிக்கா நீச்சல் வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாடலாசிரியர் ஆனந்த் பாக்சி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அற்புதமாக இசையமைத்து இருப்பார். 1999ஆம் ஆண்டு வெளியான தால் படத்தில் ஐஸ்வர்யா ராய், அக்சய் கன்னா, அனில் கபூர், அலோக் நாத், மிதா வஷிஷ்ட் மற்றும் அம்ரீஷ் பூரி உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். இந்த பாடலை அல்க யாக்நிக் மற்றும் உதித் நாராயன் ஆகியோர் பாடி இருந்தனர்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி! - Paris Olympics 2024