ETV Bharat / sports

கோவாவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது மும்பை அணி! - Ultimate Table Tennis

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 7:25 AM IST

Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸின் நேற்றை போட்டியில், நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸை வீழ்த்திய மும்பை பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

டென்னிஸ் வீராங்கனைகள்
டென்னிஸ் வீராங்கனைகள் (Credit - UTT)

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸின் 5வது தொடரானது சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ் அணி, யு மும்பா டிடி அணியுடன் மோதியது.

இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது. இதில் கோவா சேலஞ்சர்ஸ் அணியை 8-7 என்ற கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றிபெற்றது.

  • முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாயும் மும்பை அணியின் குவாட்ரி அருணாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஹர்மீத் தேசாய் 1-2 (7-11, 11-4, 10-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
  • 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் யாங்சி லியு - மரியா சியாவோவை எதிர்கொண்டார். இதில் கோவாவின் யாங்சி லியு 1-2 (11-9, 10-11, 9-11) என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
  • 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய் - யாங்சி லியு ஜோடியானது - மரியா சியாவோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் கோவா அணியின் இயின் ஹர்மீத் தேசாய், யாங்சி லியு ஜோடி 2-1 (11-6, 10-11, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
  • 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மிஹாய் போபோசிகா - மானவ் தாக்கருடன் மோதினார். இதில் மிஹாய் போபோசிகா 2-1 (11-6, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ் அணியின் யஷஸ்வினி கோர்படே, மும்பை அணியின் சுதிர்தா முகர்ஜியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் யஷஸ்வினி கோர்படே 2-1 (11-8, 11-10, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இறுதியில் 8-7 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய மும்பை அணி, 36 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது. அதே போல், இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், 37 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது கோவா அணி.

இதையும் படிங்க: சென்னை, புதுச்சேரியில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்! ஒரு தமிழக வீரர் கூட இல்லை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.