சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று 2 போட்டிகள் நடைபெற்றது. அப்போது, முதல் ஆட்டத்தில் புனேரி பல்டான் அணி 9-6 என்ற செட் கணக்கில் அறிமுக அணியான ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியை தோற்கடித்தது.
3️⃣-IN-A-ROW FOR SATHIYAN! 🔝
— Ultimate Table Tennis (@UltTableTennis) September 1, 2024
Captain Sathiyan's brilliance in Dabang Delhi T.T.C's historical comeback against PBG Bengaluru Smashers tonight earns him a third straight @IndianOilcl Player of the Tie award 👏❤️
Catch the action live tomorrow at the Jawaharlal Nehru Indoor… pic.twitter.com/SQOLnlXOV7
இதன் மூலம் 28 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது புனேரி. இதனையடுத்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில் பெங்களூரு ஸ்மாஷர்ஸ், தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. அதில், 8-7 என்ற செட் கணக்கில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தாலும், புள்ளிகளின் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றது.
புனேரி vs ஜெய்ப்பூர்:
- முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆட்டத்தில் புனேரியின் அங்குர் பட்டாசார்ஜி 2-1 (10-11, 11-10, 11-8) என்ற செட் கணக்கில் ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியின் ரோனித் பன்ஜாவை தோற்கடித்தார்.
- தொடந்து 2வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 1-2 (11-8, 10-11, 7-11) என்ற செட் கணக்கில் அய்ஹிகா முகர்ஜி, சுதாசினி ஸ்வெட்டாபட்டிடம் தோல்வி அடைந்தார்.
- 3வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் புனேரி பல்டான் அணியின் நடாலியா பஜோர், அனிருபன் கோஷ் ஜோடி 2-1 (11-10, 7-11,11-9) என்ற செட் கணக்கில் நித்ய ஸ்ரீ மணி, சோ செங்மின் ஜோடியை வீழ்த்தியது.
- 4வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜோவோ மோன்டீரோ 2-1 (8-11,11-10,11-7) என்ற செட் கணக்கில் சோ செங்மினை தோற்கடித்தார்.
- கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடாலியா பஜோர் - நித்ய ஸ்ரீ மணியை வீழ்த்தினார். இதனால் புனேரி பல்டான் அணி 9-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
Kyu hila dala na 🔥😎
— Ultimate Table Tennis (@UltTableTennis) September 1, 2024
Dabang Delhi T.T.C. pull off a comeback for the ages to hand PBG Bengaluru Smashers their first defeat.🤯
Tickets available on 🔗https://t.co/OG2cOMu4qB #UTT #UltimateTableTennis #TableTennis #HarShotMeinMazaa #IndianOilUTT pic.twitter.com/l471QhO62l
பெங்களூரு vs டெல்லி
- ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆல்வரோ ரோபில்ஸ் - யாஷன்ஸ் மாலிக்குடன் மோதினார். இதில் பெங்களூரு அணியின் அடிடவ ஆல்வரோ ரோபில்ஸ் 3-0 ( 11-3, 11-10, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் லில்லி ஸாங், தபாங் டெல்லி அணியின் ஓரவன் பரனாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் லில்லி ஸாங் 3-0 (11-7, 11-7, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.
- 3வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் ஆல்வரோ ரோபில்ஸ் - மணிகா பத்ரா ஜோடியானது - சத்தியன் ஞானசேகரன், ஓரவன் பரனாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில், ஆல்வரோ ரோபில்ஸ் - மணிகா பத்ரா ஜோடி 1-2 (8-11, 11-8, 8-11) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
- 4வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஜீத் சந்திரா - சத்தியன் ஞானசேகரனுடன் பலப்பரீட்சை நடத்தினர். இதில், ஜீத் சந்திரா 0-3 (10-11, 6-11, 5-11) என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தார்.
- கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா - தியா சித்தலேவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் மணிகா பத்ரா 0-3 (6-11, 10-11, 8-11) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி சந்தித்தார்.
இறுதியில், 8-7 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணியிடம் வீழ்ந்த போதிலும், 48 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது பிபிஜி பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணி. 41 புள்ளிகளுடன் டெல்லி அணி 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பவுன்சர் பந்துகளுக்கு பிசிசிஐ செக்! வேகப்பந்து வீச்சாளர்களின் கதி என்ன?