திண்டுக்கல்: டிஎன்பிஎல் 8வது சீசன் சேலம், கோவை மற்றும் திருநெல்வேலியைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், குவாலிஃபையர் 1இல் விளையாடுவதற்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
Nellai Royal Kings end their TNPL 2024 campaign with a win tonight. 🔥
— TNPL (@TNPremierLeague) July 28, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#NRKvDD #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/UWwPgaIgFk
136க்கு ஆல் அவுட்: இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 19.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஷிவம் சிங் சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் 70 ரன்கள் குவித்ததோடு இந்த சீஸனில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தினார்.
அவரைத் தவிர அந்த அணியில் வேறெந்த வீரரும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. மறுபுறம் நெல்லை அணி தரப்பில், சோனு யாதவ்ச் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த சீஸனில் தங்களது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய நெல்லை அணி 137 என்ற எட்டக்கூடிய இலக்கை நோக்கிக் களமிறங்கியது.
இந்த போட்டியில் கேப்டனாக அஜிதேஷ் செயல்பட இம்பாக்ட் வீரராக கே.பி அருண் கார்த்திக் களமிறங்கினார். அவருடன் களமிறங்கிய சூர்யபிரகாஷ் (0) ரன் எதுவும் எடுக்காமல் வி.பி திரன் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
Which two teams will qualify for the TNPL 2024 finals? 🏆
— TNPL (@TNPremierLeague) July 28, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/najUdAtGs1
நெல்லை வெற்றி: மறுபுறம் அருண் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 30 பந்துகளில் 45 ரன்கள் அடித்து இலக்கை நோக்கி மிக விரைவாகச் சென்றார். நெல்லை அணி 71/1 என்ற நிலையிலிருந்த போது அஷ்வினின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி அடுத்த 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆல் ரவுண்டர் சோனு யாதவ்(15) மற்றும் ஹரீஷ் (22) ஆகிய இருவரும் தலா 2 சிக்ஸர்களை அடிக்க, நெல்லை அணி கிட்டத்தட்ட தங்களின் வெற்றியை உறுதி செய்தது. ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் கேப்டன் அஜிதேஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெல்லை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி 2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் சீஸனை வெற்றியுடன் நிறைவு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் இந்தப் போட்டியில் தோற்றதால் ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை அவர்கள் எதிர்கொள்வார்கள்.
அஷ்வின் பேட்டி: தோல்விக்குப்பின் திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசுகையில், "நிச்சயம் நாங்கள் அடித்த ஸ்கோர் வெற்றிக்கு போதாது. இன்னும் 30-40 ரன்கள் அடித்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பிருந்திருக்கும். எங்கள் பேட்டிங்கின் போது ரன் அவுட்கள் மூலம் 4 விக்கெட்களை இழந்தது பெரிய தவறாக நினைக்கிறேன். எலிமினேட்டரில் சேப்பாக் அணியை சந்திக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்", என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியா மேலும் 3 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு.. போட்டிகளின் முழு விவரம்!