ETV Bharat / sports

இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி; 3வது முறையாக தங்கத்தை தக்க வைத்த தமிழக அணி!

இந்திய வனத்துறை சார்பில் சத்தீஸ்கரில் நடைபெற்ற 27வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழக வனத்துறையைச் சேர்ந்த கபடி மற்றும் வாலிபால் அணி தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

கோயம்புத்தூர்: இந்திய வனத்துறை சார்பாக 27வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது. இதில், தமிழக வனத்துறை சார்பில் கபடி, வலு தூக்கும் போட்டி, வாலிபால் மற்றும் தடகள அணியினர் என 16 அணிகள் பங்கேற்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், தமிழ்நாடு வனத்துறை கபடி அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. இதன் காரணமாக, தற்போது நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் நேரடியாக காலிறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் தகுதி தமிழ்நாடு வனத்துறை அணி பெற்றிருந்தது. அதன்படி, கோவை மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான தமிழ்நாடு வனத்துறை கபடி அணி, காலிறுதிப் போட்டியில் டெல்லி வனத்துறை அணியுடன் மோதியது.

தமிழக அணி
தமிழக அணி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை துவம்சம் செய்த இந்தியா! அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்

அதில், தமிழ்நாடு வனத்துறை அணி 69-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு வனத்துறை அணி ஹரியானா வனத்துறை அணியுடன் மோதியது. அதிலும், தமிழ்நாடு வனத்துறை அணி 48-10 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடைபெற்ற அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு வனத்துறை அணி மற்றும் சத்தீஸ்கர் வனத்துறை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் தமிழ்நாடு வனத்துறை அணி 44-23 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3-வது முறையாக தங்கம் பதக்கம் வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோன்று, வாலிபால் போட்டியிலும் தமிழக வனத்துறை தொடர்ந்து 3 முறையாக தங்கம் வென்றுள்ளது. வலு தூக்கும் போட்டியில் கோவை வனக்கோட்டத்தைச் சார்ந்த வனவர்கள் ஐயப்பன், செந்தில்குமார் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.