ETV Bharat / sports

"குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - WORLD CHESS CHAMPION GUKESH

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்
உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தமிழக அரசு தரப்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. அந்தவகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டும் வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதலமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

அதன் அடிப்படையில், தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் நேற்று (டிச.12) நடப்பு சாம்பியனான சீனா வீரர் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ்.. பிரதமர், முதல்வர் வாழ்த்து!

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷை, முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்டிருந்ததோடு, தொலைப்பேசி வாயிலாகவும் டி.குகேஷை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ்-க்கு, தற்போது ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருகுக் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி.குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.