ETV Bharat / sports

ஃபார்முலா 4 கார் பந்தயம்; போக்குவரத்துக்கு சிக்கலா? அரசு கூறுவது என்ன? - chennai Formula Car Race - CHENNAI FORMULA CAR RACE

Chennai Formula 4 night race: சென்னை ஃபார்முலா கார் பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை என தமிழ்நாடு அரசு கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை கார் பந்தயம்
சென்னை கார் பந்தயம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 6:33 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 31 (நாளை) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடக்கிறது.

இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐஏஎஸ் மற்றும் கார் பந்தய வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அதுல்யா மிஸ்ரா பேசும் போது, ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. மேலும், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் கார் பந்தயங்கள் நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து, மேகநாத் ரெட்டி ஐஏஎஸ் பேசும் போது, இந்த ரேஸ் சென்னையில் நடத்தப்படுவதால் சர்வதேச நிகழ்ச்சி ஒன்று சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த வருடம் அதிகமான சென்னையைச் சேர்ந்த (Racer) பந்தய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சர்வதேச வீர்ரகளுடன் போட்டி போட்டு வளர்ச்சி அடைய ஊக்கமளிக்க கூடும். இதற்கு கடந்த ஒரு வாரமாக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தமிழகத்திற்கு போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.