ETV Bharat / sports

அபிஷேக் சர்மா அபாரம்.. லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த ஹைதராபாத்! - SRH VS PBKS - SRH VS PBKS

SRH Vs PBKS: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Sunrisers hyderabad won punjab kings
Sunrisers hyderabad won punjab kings (Credit: ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 7:36 PM IST

ஹைதராபாத்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆஃப் சுற்று நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியாகி உள்ளது.

இந்த நிலையில், இத்தொடரின் லீக் ஆட்டம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பாக விளையாடிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71, ரோசோவ் 49, அதர்வ தைடே 46 மற்றும் ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடிது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த ஹைதராபாத் தொடக்க கூட்டணிக்கு, பஞ்சாப் அணி முதல் பந்தே அதிர்ச்சியைக் கொடுத்தது. டிரவிஸ் ஹெட் அர்ஷதீப் சிங் வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன்பின் வந்த ராகுல் திர்பதி - அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து அணிக்கு ரன்களைச் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய அவர், 33 ரன்களில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஸ்லோ டெலிவரிக்கு இரையானார். தொடர்ந்து நிலைத்து இருந்த அபிஷேக் சர்மா அரைசதம் விளாசினார்.

ஒரு கட்டத்தில் அபிஷேக் சர்மா 66 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து நிதீஷ் ரெட்டி 37, சபாஷ் அகமது 3, கிளெசன் 42 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இச்சூழலில், ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் 8 போட்டிகள் வென்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. நடைபெற இருக்கும் ராஜஸ்தான் - கொல்கத்தா இடையேயான போட்டியின் முடிவை வைத்தே ஹைதராபாத் அணி எலிமினேட்டரில் பெங்களூரு அணியுடன் மோதப் போகிறதா அல்லது குவாலிபையர் 1-இல் கொல்கத்தாவுடன் மோதப் போகிறதா என்பது முடிவாகும்.

இதையும் படிங்க: “இது தனிமனித மீறல்..” ரோகித் சர்மா ஆத்திரத்தின் பின்னணி என்ன? - Rohit Sharma

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.