ETV Bharat / sports

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் வெற்றி இலக்கு.. திணறிய ஹைதராபாத் அணி! - IPL 2024 Final - IPL 2024 FINAL

IPL 2024 Final: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 114 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை வீழ்த்திய தருணம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை வீழ்த்திய தருணம் (credits - ANI)
author img

By ANI

Published : May 26, 2024, 9:54 PM IST

சென்னை: ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று முடிந்தன. அந்த வகையில், இறுதிப் போட்டியில் இன்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், ராகுல் திரிபாதி களம் காண, டிராவிஸ் ஹெட் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

3வது ஓவரில் முதல் பந்தில் திரிபாதி பவுண்டரியை விளாசினார். இதுவே அணிக்கு முதல் பவுண்டரி ஆகும். பின்னர், மார்க்ராம் பவுண்டரி விளாசினார். இருவரும் ஜோடி போட்டு விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திரிபாதி வெறும் 9 ரன்களுக்கு அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவர் ப்ளே கடைசி ஓவரில், ஹைதராபாத் அணிக்கு 17 ரன்கள் குவிந்தன. 6 ஓவர் முடிவிற்கு 40 - 3 என்ற கணக்கில் விளையாடியது.

7வது ஓவரில் நித்திஷ் ரெட்டி அவுட் ஆக கிளாசன் களம் கண்டார். 10 ஓவர் முடிவிற்கு 61 - 4 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி விளையாடியது. மார்க்ராம் 11வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி திணறியது.

வருண் சக்கரவர்த்தி பந்தில் ஷாபாஸ் அகமது விளாச நரைன் கேட்ச் பிடித்ததால், ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டை இழக்க, அப்துல் சமத் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிச் சென்றார். பின்னர், அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் களம் கண்டார். 14 ஓவருக்கு 90 ரன்கள் எடுத்து அணி திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் பாட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தார்.

இருந்தாலும், பாட்னர்ஷிப்பில் இருந்த கிளாசன் ரானா வீசிய பந்தில் போல்ட் ஆனார். 17 ஓவருக்கு 108 - 8 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி விளையாடியது. 18வது ஜெய்தேவ் உனத்கட் எல்பிடபிள்யூ ஆனார். 18.3வது ஓவரில் ஹைதராபாத் அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ராம் 20 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரசல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, நரைன், வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படிங்க: ஐபில் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 10 விக்கெட்டுகளும் சரிந்தது எப்படி? - SRH All Out

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.