ETV Bharat / sports

சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?

Pat Cummins: நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் சன்ரைசஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு இந்திய மண்ணில் உலக கோப்பை வென்ற பேட் கம்மின்ஸ் துவண்டு கிடக்கும் ஐதராபாத் அணியை தூக்கி நிமர்த்துவாரா என்ற ஆவல் அதிகரித்து உள்ளது.

Pat Cummins
Pat Cummins
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 3:18 PM IST

ஐதராபாத்: நடப்பாண்டுக்கான 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் கேப்டன் தொடங்கி அனைவரையும் மாற்றி அமைத்து வருகிறது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அதேபோல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேநேரம் கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் 3வது முறையாக கேப்டனை மாற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மற்றும் பயிற்சியாளராக டாம் மூடி செயல்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கழற்றிவிடப்பட்டு, புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் புதிய பயிற்சியாளராக பிரையன் லாரா தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கடந்த சீசனில் ஐதராபாத் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இதையடுத்து ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 18 நாட்களுக்கு முன்பாக ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐதராபாத் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

அதேநேரம் எஸ்ஏ20 லீக் தொடரில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து எய்டன் மார்க்ராம் நீக்கப்பட்டு உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.