பல்லேகலே: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 2வது டி20 கிரிக்கெட் போடியில் முறையே இந்திய அணி 43 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.30) பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். முன்னதாக பல்லேகலேவில் பெய்த மழை காரணமாக இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
🚨 Toss and Playing XI 🚨#TeamIndia will bat first in the third and final T20I 🙌
— BCCI (@BCCI) July 30, 2024
4️⃣ changes in tonight's Playing XI 👍
Follow the Match ▶️ https://t.co/UYBWDRh1op#SLvIND pic.twitter.com/O6OxpsWamZ
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், கலீல் அகமது.
இலங்கை: பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, மதீஷா பத்திரன, அசித்த பெர்னாண்டோ.
இதையும் படிங்க: இந்தியா - இலங்கை 3வது டி20 கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்! - Ind vs SL 3rd T20 Cricket