ஐதராபாத்: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆல்டைம் ஐபிஎல் பிளேயிங் வெலன் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் அதிரடி ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெயில், கிரென் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
அதேநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அண்யில் இருந்து இரண்டு வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களும் அஸ்வினின் பேவரைட் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன் யூடியூப் நேரலையில் கலந்து கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.
அஸ்வினின் பிளேயிங் லெவனில் கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், ஆல்ரவுண்டர்கள் ஷேன் வாட்சன், டுவெய்ன் பிராவோ ஆகியோருக்கு இடம் கிடைக்காத நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஐந்து கேப்டன்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற ரோகித் சர்மா, அதிக ரன்கள் அடித்த விராட் கோலி ஆகியோர் அஸ்வினின் பிளேயிங் லெவனில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். 4வது இடத்தில் 20 ஓவர் உலக கோப்பையின் நாயகன் சூர்யகுமார் யாதவ் உள்ளார். மிடில் ஆர்டர் வரிசையில் பெங்களுரூ அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இடம் பிடித்துள்ளார். எதிர்பார்த்தது போல அஸ்வின் பிளேயிங் லெவனில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் அங்கம் வகிக்கிறார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரேன் மற்றும் ரஷித் கானும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா ஆகியோரும் அஸ்வினின் ஆல் டைம் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து உள்ளனர்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்: ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன் &விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம்: விளையாட்டின் மூலம் உலகை ஒன்றிணைக்க பாடுபடுவோம்! - National Sports Day 2024