பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் (euro champions 2024) இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் தமக்கு கிடைத்த பீரி கிக் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதியின் 47-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார்.
2024 CHAMPIONS: Spain 🇪🇸#EURO2024 pic.twitter.com/8jGoI5ZSv0
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் கோல் பால்மர் அபாரமாக கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இதனால் கடந்த முறை போல இந்த முறை போட்டி சமனில் முடிந்து பெனால்டி முறையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்குதான் ட்விஸ்ட்டான நிகழ்வே அரங்கேறியது. ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த மைக்கேல் ஓயர்சபால் போட்டியின் 86வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் பரப்பானது. கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக முயற்சித்து கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
🔝 performance
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
🔝 tournament
Nico Williams is the real deal 👏@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/lPu38RWoX0
வரலாற்றுச் சாதனை: இந்த வெற்றியின் மூலம் 4வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் யூரோ கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது.
அதேபோல், கடந்த 58 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்ற சோகம் இந்த ஆண்டும் தொடர்கிறது. இந்த தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ள ஸ்பெயின், இந்த தொடர் முழுவதும் 15 கோல்களை அடித்துள்ளது.
மேலும், இந்த தொடரில் இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். அதே போன்று ஆட்டநாயகன் விருதை நிக்கோவும், தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ரோட்ரி வென்றார்.
இதையும் படிங்க: ஜோகோவிச்சை வீழ்த்தி 2வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார் அல்காரஸ்!