பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியானது பாரிஸ் மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தென் கொரிய பெண்கள் அணியைச் சேர்ந்த லிம் சி-ஹியோன், நாம் சு-ஹியோன் மற்றும் ஜியோன் ஹன்-யங் ஆகிய மூவரும் இணைந்து சீன பெண்கள் அணியான ஆன் கிக்சுவான், லீ ஜியாமன் மற்றும் யாங் சியாலி ஆகியோரை வீழ்த்தி 10வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று உள்ளனர்.
It’s #gold for the Republic of Korea! 🇰🇷
— The Olympic Games (@Olympics) July 28, 2024
First place in archery women's team! The Republic of Korea has won gold in this event at every single Olympic Games since first held in Seoul 1988. That's 10 gold medals in a row!! 🏹@Korea_Olympic | @worldarchery | #Archery#Paris2024… pic.twitter.com/xb02m04X6T
இதுவரை வில்வித்தை போட்டியில், தென் கொரிய பெண்கள் அணியைத் தவிர வேறு எந்த அணிகளாலும் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக் போட்டி தொடங்கிய கடந்த 1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை தென் கொரிய பெண்கள் அணி மட்டுமே தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
மேலும், இந்தப் போட்டியில் மெக்சிகன் அணியான ஏஞ்சலா ரூயிஸ், அலெஜாண்ட்ரா வலென்சியா மற்றும் அனா வாஸ்குவேஸ் ஆகியோர் நெதர்லாந்தை முறியடித்து, வெண்கல பதக்கமான தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளனர். இதில், சீனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கம்.. மனு பாக்கருக்கு குவியும் பாராட்டுக்கள்! - modi congrats manu bhaker