ஹைதராபாத்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், உள்ளிட்ட இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறது இந்திய அணி.
இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக நேற்று விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் ஜிம்பாப்வேவிற்கு புறப்பட்டு சென்றனர்.
Jet ✈️
— BCCI (@BCCI) July 1, 2024
Set 👌
Zimbabwe 🇿🇼#TeamIndia 🇮🇳 | #ZIMvIND pic.twitter.com/q3sFz639z7
இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில் இந்தியாவின் இளம் படையை எதிர்கொள்ள சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூத்த வீரர்களான கிரெய்க் எர்வின், ஷான் வில்லியம்ஸ். ரையன் பர்ல் உள்ளிட்டவர்கள் இடம் பெறவில்லை. அதே போல் இந்த அணியில் நக்வி அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.
இந்தியா அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
Zimbabwe include Naqvi in squad for T20I series against India
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 1, 2024
Details 🔽https://t.co/MYR4waitsL pic.twitter.com/6pIg6AYy12
ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், காம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடாண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி ததிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளெஸ்ஸிங், நகர்விட், மையர்ஸ் , மில்டன் சும்பா.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட்! இந்திய மகளிர் அபார வெற்றி!