ஐதராபாத்: மும்பையில் நடைபெற்ற தனியார் விருது விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விருது விழா நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக ரோகித் சர்மா வந்தார். விருது நிகழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
மற்ற வீரர்கள் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா வருவதை கண்ட இந்திய அணியின் வீரர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், இரண்டாவது வரிசையில் ரோகித் சர்மா உட்கார முயன்றார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உடனே எழுந்து நின்று தன்னுடைய இடத்தில் அமருமாறு ரோகித் சர்மாவிடம் கூறினார்.
Shreyas Iyer tried to get Rohit to sit in the first row, but Rohit insisted, 'You sit,' and chose to sit in the second row. My idol Kohli should learn from Rohit, how to be humble in public places. pic.twitter.com/sryAWHZPE8
— Kohlified (@ItsKohliERA) August 22, 2024
இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ளாத ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரை அந்த இருக்கையில் அமரவைத்து விட்டு, இரண்டாவது வரிசையில் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருப்பிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், வீடியோவின் கீழ் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், ரோகித் சர்மாவிடம் இருந்து இன்னும் சிலவற்றை விராட் கோலி கற்றுக் கொள்ள வேண்டுமென பதிவிட்டுள்ளார். ஒரே ஊரை சேர்ந்தவர்களான ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இணைந்து விளையாடி உள்ளனர். மைதனாத்திற்கு வெளியேயும் இருவரும் தொடர்ந்து நட்பு பாரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Shreyas Iyer offered his seat to his idol Rohit Sharma ❤️
— 𝐒𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐑𝐨𝐡𝐢𝐭 (@RohitFanForLife) August 21, 2024
Rohit Sharma asked him to not be this much formal with this smile 😂#CEATCricketRatingAwards #CEAT #CEATCricketAwards #RohitSharma pic.twitter.com/LERuwF450D
விழாவில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆண்டின் சிறந்த ஆடவர் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது. முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது.
செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்க உள்ள துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். அதேநேரம் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவதற்காக தயாராகி வரும் ரோகித் சர்மா தற்போது ஓய்வில் உள்ளார்.
இதையும் படிங்க: 24 வயதில் ஓய்வு அறிவிப்பு! ஒலிம்பிக்கில் பதக்கம் தவறியதால் வருத்தமா? - Archana Kamath