பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வழக்கமாக பிரமாண்டமாக அரங்கம் அல்லது மைதானம் அமைத்து ஒலிம்பிக் தொடக்க விழா நடத்தப்படும். ஆனால் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரிஸின் மையப்பகுதியில் ஓடும் சென் நதியில் தொடங்கியது. இதனை பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஏந்திச் சென்றனர்.
இதனையடுத்து, 85 சொகுசு படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும், தங்கள் நாட்டினுடைய தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் பயணித்தது. கடைசி அணியாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் சென்றது.
🇮🇳 Result Update: BADMINTON 🏸 MEN'S DOUBLES GROUP STAGE👇🏻
— SAI Media (@Media_SAI) July 27, 2024
SAT-CHI's ✨ magic is surely working out at the #Olympics
The #TOPSchemeAthletes give us an electrifying group stage performance, taking down French 🇫🇷 duo, Ronan Labar & Lucas Corvee 21-17, 21-14 pic.twitter.com/MhlqyPYX3m
ஒலிம்பிக் தொடக்க விழா நேற்று களைகட்டிய நிலையில், இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் கவுதமாலாவின் கெவின் கோர்டான் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 21-8 என்ற கணக்கில் கெவின் முன்னிலை வகித்தார். அதற்கு அடுத்த செட்டில் இறுதிவரை கடுமையாக போராடிய லக்சயா சென் 22-20 என்ற கணக்கில் கெவினை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதற்கு அடுத்தபடியாக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவிற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, பிரான்ஸ் நாட்டின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டில் 21-17 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டில் 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய ஜோடி சாத்விக் - சிராக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இதையும் படிங்க: இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு; சூர்யகுமார் யாதவ் அபாரம்!