டெல்லி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் உடனான திருமண பந்தம் முறிந்தது குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக், நடிகை சனா ஜாவத் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், சான்யா மிர்சாவுடனான விவாகரத்து வெட்ட வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் இஷான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை ஒருவரை ஷோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
சனா ஜவாத் உடனான திருமண புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், சானியா மிர்சா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவருக்கு விவாகரத்து நடந்ததா என ரசிகர்கள் தம்பதியின் இடையே என்ன பிரச்சினை என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சானியா மிர்சாவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்து உள்ளனர். பொது வெளியின் பார்வைக்கு கொண்டு வராத வகையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இதுவரை சானியா காத்து வருவதாகவும், இருப்பினும் ஷோயிப் மாலிக் உடனான அவரது திருமண பந்தம் முறிவுக்கு வந்தது குறித்தும், இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றதையும் தெரிவிக்க வேண்டிய நிலை தற்போது எழுந்து உள்ளதாக கூறி உள்ளனர்.
அதேநேரம் ஷோயிப்பின் புதிய வாழ்க்கை பயணம் சிறப்பானதாக அமைய வேண்டும் என சானியா விரும்புவதாகவும், இந்த நேரத்தில் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் அவரது தனியுரிமைக்கு மதிப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் சானியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சானியா - சோயிப் மாலிக் இருவரும் பிரிய உள்ளதாக தகவல் பரவியது. இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவை பின்தொடர்வதை சோயிப் மாலிக் நிறுத்தியதை அடுத்து இந்த விஷயம் பெரிய அளவில் புதாகரமாக வெடித்தது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவிய நிலையில், மகன் இஷானின் பிறந்த நாளில் சானியா - சோயிப் கூட்டாக கலந்து கொண்டதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : U19 ஒருநாள் உலகக் கோப்பை 2024: சௌமி பாண்டே சுழலில் வீழ்ந்த வங்கதேசம்.. இந்தியா அபார வெற்றி!