பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக், தற்போது பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக புதிய பிரவேசம் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பெங்களூரு அணியின் இயக்குநர் மொ போபட் கூறுகையில், பெங்களுரூ அணியின் பயிற்சியாளர்கள் அணியில் தினேஷ் கார்த்திக் இணைவது அணிக்கு கூடுதல் பலம் என்றும் அவரை களத்தில் பார்ப்பதற்கு உத்வேகத்துடன் விளையாடக் கூடியவராக திகழ்வார் என்றார்.
மேலும் அவர் பயிற்சியாளராக அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தான் நம்புகிறேன் என்றும் ஒரு வீரராக அவரது நீண்ட கால சாதனையும் அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பு பற்றி பேசுப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த புதிய தொழில்முறை அத்தியாயத்தில் அதே தரத்தையும் அர்ப்பணிப்பையும் அவர் அணிக்கு கொண்டு வருவார் என்று தனக்குத் தெரியும் என்று கூறினார்.
முன்னதாக கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். தொடர்ந்து தனது கடைசி ஐபிஎல் சீசனை பெங்களூரு அணியில் நிறைவு செய்தார். 2024 ஐபிஎல் சீசனில் மொத்தம் 15 ஆட்டங்களில் விளையாடி 326 ரன்களை தினேஷ் கார்த்திக் குவித்தார்.
39 வயதான தினேஷ் கார்த்திக் தனது 19வது வயதில் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானர். 20 ஆண்டுகளாக இந்திய அணியில் பல்வேறு காலக்கட்டங்களில் தனது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்தார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி உள்ளார்.
மேலும், 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 842 ரன்களை தினேஷ் கார்த்டிக் குவித்துள்ளார். இதில் 22 அரைசதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 சீசனுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு முடிவை அறிவித்த ஒரு மாதத்திற்குள் தினேஷ் கார்த்திக், பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ரோகித் சர்மாவால் உலகின் மிகப்பெரிய பணக்காரனாக உணர்கிறேன்" - ரோகித்தின் பயிற்சியாளர் தினேஷ் லாட் நெகிழ்ச்சி - DINESH LAD about Rohit Sharma