ETV Bharat / sports

சொந்த மண்ணில் ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு.. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அதிரடி வீரர்கள்..! - IPL 2024 - IPL 2024

SRH vs RCB: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 41வது போட்டியில், ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தனது இரண்டாவது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது.

RCB BEAT SRH IN HYDERABAD
RCB BEAT SRH IN HYDERABAD
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 9:38 AM IST

ஹைதராபாத்: கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 41வது போட்டி, நேற்று (வியாழக்கிழமை) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் டூ பிளெஸ்ஸிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து விளையாடிய வில் ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய ராஜத் பட்டிதர், விராட் கோலியுடன் அமைத்த கூட்டணி சிறுது நேரம் நீடித்து, அணிக்கு கணிசமான ரன்களைச் சேர்த்தது. திறன்பட விளையாடிய ரஜத் பட்டிதார், 5 சிக்சர்கள் மற்றும் 2 ஃபோர்கள் உட்பட 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, விராட் கோலியும் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய , கமரூன் கிரீன் 37 ரன்களும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 7 ரன்களும், ஸ்வப்னில் சிங் 12 ரன்களை எடுத்தனர். இதனை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

சொந்த ஊரில் தோற்றுப்போன ஹைதராபாத் அணி: அதனைத் தொடர்ந்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழும் எய்டன் மாக்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி, 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் என மொத்தம் 31 ரன்களை சேர்த்திருந்தார். இந்நிலையில், ஹைதராபாத் அணி 56 ரன்களுக்கு 4 விக்கேட்டுகள் இழந்திருந்தது. பின்னர், களமிறங்கிய ஷபாஸ் அகமது இறுதி வரை நிதானமாக விளையாடி 40 ரன்களை எடுத்திருந்தார்.

அதேபோல், மறுமுனையில் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 15 பந்திகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்து 31 ரன்களை சேர்த்திருந்தார். இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் விளையாடிய ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனை அடுத்து, 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து 6 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பெங்களூரு அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், கடந்த போட்டிகளில் 250க்கும் மேல் ரன்களை குவித்த ஹைதராபாத் அணி, சொந்த ஊரில் 171 ரன்களில் சுருண்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்தியது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ராகுல் விலகல்? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.