ஐதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது இந்தியா. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் தமிழக வீரர் அஸ்வினின் பங்கு என்பது அளப்பறியது. சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டு இருக்கும் போது களமிறங்கிய அஸ்வின் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
மேலும் அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் அஸ்வின். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
Most Player-of-the-Series awards in Test cricket
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 1, 2024
Muthiah Muralidaran - 11
R Ashwin - 𝟭𝟭#INDvBAN pic.twitter.com/TqIqhLjz6K
உலக சாதனை படைத்த அஸ்வின்:
வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர் நாயகன் விருது வாங்கியதில் அஸ்வின் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் 11 முறை தொடர் நாயகன் விருது வாங்கி உள்ளார். அதேநேரம் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் 11 முறை தொடர் நாயகன் விருது வாங்கி உள்ளார்.
ஆனால் குறைந்த போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருது வாங்கிய வீரர் என அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். மொத்தம் 42 போட்டிகளில் 11 தொடர் நாயகன் விருதுகளை வென்று அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
1⃣1⃣4⃣ runs with the bat
— BCCI (@BCCI) October 1, 2024
1⃣1⃣ wickets with the ball
R Ashwin becomes the Player of the Series for his terrific all-round display 🫡
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @ashwinravi99 | @IDFCFIRSTBank pic.twitter.com/ygNcY3QhXd
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்:
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 37 ஆட்டங்களில் விளையாடிய அஸ்வின் அதில் 185 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் உள்ளார். அவர் 43 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்த பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட் கம்மின்ஸ் (42 போட்டி 175 விக்கெட்), மிட்செல் ஸ்ட்ரார்க் (38 போட்டி 147 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
ASHWIN - India's Greatest match winner in Test history 💪 pic.twitter.com/j8aeQDKSdq
— Johns. (@CricCrazyJohns) October 1, 2024
வீரர் | போட்டிகள் | விக்கெட்டுகள் |
நாதன் லயன் (ஆஸ்திரேலியா) | 43 | 187 |
அஸ்வின் (இந்தியா) | 37 | 185 |
பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) | 42 | 175 |
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) | 38 | 147 |
ஸ்டுவர்ட் பிராட் (இங்கிலாந்து) | 33 | 134 |
இதையும் படிங்க: வெளிநாட்டு வீரர்களுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ! இனி ரூ.20 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தான் சம்பளமாம்! - Foreign players Salary cut in IPL