ஐதராபாத்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா முன்னிலை:
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையின் குறுக்கிட்டால் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. இதில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 107 ரன்களை சேர்த்தது.
Most Wickets in Asia in Test cricket for India:
— Johns. (@CricCrazyJohns) September 27, 2024
Ravichandran Ashwin - 420*
Anil Kumble - 419
Ashwin, The GOAT 🐐 pic.twitter.com/HK0Ea08nbp
ஆசியாவிலேயே முதல் இந்திய வீரர்:
இந்தப் போட்டியில் வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோவை 31 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார் தமிழக வீரர் அஸ்வின். இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார்.
இந்தப் பட்டியலில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், 419 விக்கெட்டுகளுடன் அனில் கும்பிளே இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இன்றைய போட்டியின் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து 420 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார்.
மேலும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றார். சர்வதேச அளவில் 523 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் 8வது இடத்தில் உள்ளார்.
ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:
- முத்தையா முரளிதரன் - 620 விக்கெட்,
- ரவிசந்திரன் அஸ்வின் - 420 விக்கெட்,
- அனில் கும்ப்ளே - 419 விக்கெட்,
- ரங்கன ஹேரத் - 354 விக்கெட்,
- ஹர்பஜன் சிங் - 300 விக்கெட்.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் சீசனில் போட்டிகள் அதிகரிப்பா? பிசிசிஐ போடும் திட்டம் என்ன? - IPL 2025 Matches Increase